அம்பேத்காரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் எஸ்சி எஸ்டி பிரிவு நலசங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை.
அம்பேத்காரின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஒர் நிகழ்வாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் எஸ்சி. எஸ்டி.பிரிவு நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.கலியமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட பொருளார் கோவிந்தராஜன்,
அமைப்பு செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம்,
மாவட்ட இணை செயலாளர் துரை செல்வன், மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் உள்பட ஏரளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.