தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை திருச்சியில் விற்ற 2 பேர் கைது.
திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக சுல்தான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி பாலக்கரை
மார்சிங்பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பீம நகரைச் சேர்ந்த மாரி கண்ணன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.