திருச்சி விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜாவுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பாராட்டு.
திருச்சியில் வருடம் தோறும் நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று கங்காரு காப்பக முதியோர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர் கே ராஜா சார்பில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அப்போது மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர் , முதியோர் அனைவரும் நடிகர் விஜய் திரைப்படம் வெளிவரும்போது படத்தை பார்ப்பதற்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டுமென்று கூறியுள்ளனர். அவர்களின் விருப்பத்தினை ஏற்று திருச்சி மாவட்டத்தில் எந்த ஒரு ரசிகர் மன்றமும் செய்யாத நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் அவர்கள் திரைப்படம் பார்ப்பதற்கு 50க்கும் மேற்பட்ட நபர்களை இன்று
திருச்சி சோனா மீனா திரையரங்கில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்கு விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர் கே ராஜா அழைத்து சென்றார்.
முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் இன்று காலை 11 மணி காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுவரை நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை நாங்கள் திரையரங்கு சென்று பார்த்ததில்லை முதல்முறையாக நடிகர் விஜய் படத்தை திரையரங்கில் பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது என கூறி இதற்கு ஏற்பாடு செய்த முன்னாள் விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆர்.கே. ராஜாவை பாராட்டி சென்றனர்.
இந்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உடன் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் ஆர்கே ராஜாவின் நண்பர்கள் ஏராளமானோர் உடன் சென்றனர்.