மதுரையில் மே 5-ம் தேதி வணிகர்களின் உரிமை பிரகடன மாநில மாநாடு.திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட தலைவர் அழைப்பு.
மதுரையில் மே 5ஆம் தேதி
வணிகர்களின் உரிமை
பிரகடன மாநில மாநாடுநடைபெற உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட தலைவர் தகவல்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கல்லூரி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சிவசக்தி ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், அமைப்பு செயலாளர் கோவில் பிச்சை ,பழைய இரும்பு வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் துரைசாமி, சரவணன் ,
கனகராஜ், வேல்முருகன் , மிளகுபாறை சோமசுந்தரம்,
திருவானைக்கோவில் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெற்றிவேல் மற்றும் மாவட்ட கிளை சங்கங்களின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா பேசுகையில் மே 5 ந் தேதி மதுரையில் நடைபெற உள்ள வணிகர்களின் உரிமை பிரகடன மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது. மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்திட வேண்டும் .அதற்கு பேரவையின் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் மாநாடு நடத்திட பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார் .
கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது விலைவாசி உயர்வு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதனை சரிசெய்ய மனிதர்களின் நமது தலையாய கடமையாக கருதி விலைவாசி உயர்வை திரும்பப் பெற மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.