Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆற்றில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.

0

நாகை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் எடுக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த சம்மேளன சார்பில் திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு.


தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த சம்மேளனம் சார்பில் திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தலைமை பொறியாளரை சந்தித்து நாகை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வடரங்கம், புன்னை மணல் ரீச்சில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த லாரி உரிமையாளர்களுக்கு மணல் ஏற்ற அனுமதி தராமல் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகிறது.

இதனை அரசு உடனடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டும் என மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் மாநில செயலாளர் கண்ணையன், பொருளாளர் சாமிநாதன், மாநிலத் துணைத் தலைவர்கள் கைலாசம், லோகநாதன், மாநிலத் துணைச் செயலாளர் வரகனேரி கோபாலகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், திருச்சி மாவட்ட தலைவர் ஷியாம் சுந்தர், கோவை மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.