திருச்சி புறநகர் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம். மாவட்ட செயலாளர் குமார் அழைப்பு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்டச் செயலாளர் ப. குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது :
அ தி மு க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில், ஏப்ரல் 16 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.35 மணி முதல் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது.
மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மணப்பாறை ஆர்.வி. மஹால்,
லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு லால்குடி அருகே ஆங்கரை சரோஜா மகால்,
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு திருவெறும்பூர் செந்தூர் மகால் ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெறு உள்ளது.
எனவே குறிப்பிட்ட தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் அதிமுக ஒன்றிய கழக, நகர கழக, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகளாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப மனுக்களை சமர்பிக்கலாம் என திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.