திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆலோசனை.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பான நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக, ஓன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, பகுதி கழக, மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.