திருச்சியில் புதிய பேருந்து வழித் தடத்தை துவக்கி வைத்தார்
திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அவரது தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பாப்பாகுறிச்சி பகுதிக்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய நகர பேருந்து வழித்தடத்தில் சத்திரம் பேருந்து நிலையம் முதல் பாப்பா குறிச்சி வழி அரியமங்கலம் காட்டூர் வரை தினசரி 4 நடைகள் இயக்கப்படும் புதிய பேருந்திணை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கார்ட்டூர் பெரியார் சிலை அருகில் பாப்பாகுறிச்சி பகுதிக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு, கோட்டத் தலைவர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் பகுதி செயலாளர் நீலமேகம் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.