திருச்சியில் பிரோடிஜி எஜுகேஷன் நிறுவனத்தின் புதிய மென்பொருளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிமுகப்படுத்தினார்.
அனைத்து பாடங்களுக்குமான மென்பொருளை வடிவமைக்க வேண்டும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டல் விழா அரங்கில் பிரோடிஜி எஜுகேஷன் நிறுவனத்தின் புதிய மென்பொருள் அறிமுக விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பிரோடிஜி எஜுகேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மகாலட்சுமி சதீஷ் புதிய மென்பொருள் பற்றி செயல்முறை விளக்கம் அளித்தார்.
விழாவில் கலந்து கொண்டு, புதிய மென்பொருளை வெளியிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
“கடினமாக உள்ள கணிதப் பாடத்தை எளிமையான முறையில் மாற்றி தரவல்ல மென்பொருளை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய மென்பொருட்கள் கிடைக்கின்ற பொழுது கற்றலில் ஆர்வம் அதிகமாக இருக்கும் என நம்புகிறேன்.
தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசுப் பள்ளியாக இருந்தாலும் அனைவரும் மாணவர்கள் நலனுக்காகத்தான் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆகவே வருங்கால சமுதாயத்தினர் மனதில் வைத்து நாம் செயலாற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் போது எதிர்கால மாணவ சமுதாயம் பயனடையும்.
கணிதப் பாடத்தை எளிமையாக, விளையாட்டு போல கற்றுக் கொள்ள வடிவமைத்துள்ளது போல, மற்ற பாடங்களுக்கும் மென்பொருளை வடிவமைக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், சிபிஎஸ்இ ஸ்கூல் மேனேஜ்மென்ட் அசோஷியேசன் தலைவர் மனோகரன், செயலாளர் அசோக்குமார், திருச்சி மண்டல செயற்குழு உறுப்பினர் கமலா நிகேதன் சத்தியமூர்த்தி, தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ஏ.எஸ்.
யோகராஜ்,
தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், சிங்கப்பாண்டியன், ஜெரால்டு, சீனிவாசன், கவிதா சுப்பிரமணியன் மற்றும் 150 க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரோடிஜி எஜுகேஷன் நிறுவனத்தின் மேலாளர் சிவரஞ்சனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விற்பனை பிரிவு அதிகாரி ஸ்ரீராம் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.