பறையர் இன மக்களுக்கு 12 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
மக்கள் தொகை அடிப்படையில்
பறையர் இன மக்களுக்கு 12 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்.
பறையர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீரா தென்னவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசினார். முடிவில் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் பறையர் இன மக்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .
அனைத்து மாவட்டங்களிலும் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும்.
தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் .
கிறிஸ்துவ பறையர்களை எஸ்.சி பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பறையர் இனத்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முடிவில் பறையர் சங்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.