திருச்சி மாநகரில் கலைஞர் வாரச்சந்தை துவக்கம்’
திருச்சி மாநகரின் மையப்பகுதியான காந்தி மார்க்கெட் பிரதான காய்கறி சந்தையாக விளங்குகிறது. இருப்பினும் திருச்சி மாநகரின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நெடுந்தொலைவில் இருந்து காந்தி சந்தைக்கு வரும் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தரை கடை வியாபாரிகளின் தீவிர முயற்சியால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேர கலைஞர் வாரச்சந்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் திங்கள்கிழமை திருவானைக்கோவில் பகுதியில், செவ்வாய்க்கிழமை காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியிலும், புதன்கிழமை காஜாமலை பகுதியிலும். வியாழக்கிழமை தீரன் மாநகர் மற்றும் திருவெரும்பூர் மலை கோவில் பகுதிகளிலும்,
வெள்ளிக்கிழமை மேல தேவதானம், செந்தண்ணீர்புரம், உறையூர் லிங்கம் நகர் ஆகிய பகுதிகளிலும்,
சனிக்கிழமை மாத்தூர் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை தீரன் நகர் பகுதிகளிலும் இரவுநேர காய்கறி சந்தைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு பொது மக்களின் பேராதரவோடு வியாபாரிகள் லாப நோக்கு இல்லாமல் காந்தி மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு காய்கறிகள் கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதில் மேல தேவதானம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள வாரச்சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
இந்த வார சந்தையை சுற்றியுள்ள கீழே தேவதானம், பாரதியார் தெரு, டவுன் ஸ்டேஷன், சஞ்சீவி நகர், மேலப்புலியூர் ரோடு, சங்கரன்பிள்ளை ரோடு, ஆண்டாள் வீதி, பறையடி தெரு, காவிரி ரோடு பகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு பொதுமக்களும் வந்து ஒருவாரத்துக்கு தேவையான மறைவான காய்கறிகளை இன்முகத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலரிடம் கேட்டபொழுது :-
இதை தினசரி சந்தையாக மாநகராட்சி சார்பில் மாற்றி தந்தால் எங்களுக்கு மேலும் பேருதவியாக இருக்கும் கூறினர்.
இதனை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று வாரச் சந்தையை தினசரி சந்தையாக மாற்றிட வழிவகை ஏற்படுத்திட அதிகாரிகள் முன் வருவார்களா என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக என்பது குறிப்பிடத்தக்கது.