திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பூக்கடை பன்னீர் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நாளாக ஜங்ஷன் திருவள்ளுவர் பழைய பஸ்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஹேமா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வக்கீல் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி. மற்றும் மாவட்டத் துணைத் தலைவரும் வழக்கறிஞர் பிரிவு தலைவருமான செந்தில்நாதன்,
ஜி.எம்.ஜி மகேந்திரன், செந்தூர்பாண்டியன், கலைப்பிரிவு ராகவேந்திரா, மாவட்ட பொதுச் செயலாளர்கள்
என்.எம்.பிலால், சத்தியநாதன் ,
கள்ள தெரு குமார், ஜீவா நகர் மாரிமுத்து ,
அரியமங்கலம் சுதாகர், இளைஞர் காங்கிரஸ் ரபிக் ஜங்ஷன் பட்டேல் வார்டு தலைவர்கள் வெல்லமண்டி பாலு, சம்சுதீன், பாலக்கரை மாரியப்பன், மகிளா காங்கிரஸ் அஞ்சு சேட்டு மற்றும் பலர் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் உபயோகிக்க முடியாத அளவில் விலை உயர்ந்து உள்ள சிலிண்டர், மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.