தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை.
பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை.
இதுகுறித்து திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் திருச்சி ஜான் ராஜ்குமார் கூறுகையில்,
கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை மருத்துவ ஆணையம் மூலமாக சுமார் 3,200 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.
கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக தங்களுடைய உயிரை பணையம் வைத்து குடும்பத்தை மறந்து அவர்கள் 2 ஆண்டு சிறப்பாக தங்களுடைய செவிலியர் பணி ஆற்றி வந்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென்று தமிழக அரசு அவர்களை பணி நீக்கம் செய்து விட்டதாக அறிவித்து உள்ளது மிகவும் வேதனைக்குரியது.
3,200 செவிலியர்களில் 2,400 பேரை மட்டும் வைத்துக் கொண்டு மீதி 800 பெயரை தெரியாமல் செய்துவிட்டதாக டெர்மினேட் செய்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதனால் ஏழை எளிய கிராமப்புற செவிலியர் பெண்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் பணி செய்த போது அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து கொடுப்பதாக இரவும் பகலும் வேலை வாங்கி விட்டு, இப்பொழுது அவர்களை நடுரோட்டில் நிறுத்தினால் அந்த குடும்பம் நிலை என்னாகும் என்பதை தமிழக அரசு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
அதனால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 800 செவிலியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். அது மட்டுமல்ல திருச்சியில் 38 பேரில் 12 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது மிகவும் வேதனைக்குரியது.
இந்த 12 செவிலியர்களின் குடும்பத்தை போய் பார்த்தால் 12 குடும்பத்தினரும் எந்த வருவாயும், எந்த பின்னணி இல்லாத மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவர்கள்.
எனவே தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் உடனடியாக கருணை அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
திருச்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 செவிலியர்களும் சென்னை சென்று தலைமைச் செயலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர். ஆகையால் அதற்கு முன்பே தமிழக அரசு இவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்