கே.என்.ராமஜெயம் நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் சிறப்பு இலவச மருத்துவ முகாம்
மறைந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் நினைவு இனிய நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் சிறப்பு மருத்துவ முகாம்.
மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு தினத்தை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தொழிலதிபரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான மறைந்த கே.என்.ராமஜெயத்தின் 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி உறையூர் தமிழ் ஹெர்பல் அக்குபஞ்சர் மையத்தில் நடைபெற்ற இந்த இலவச சித்தா, அக்குபஞ்சர் மருத்துவ முகாமிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார்.
இம்முகாமில் நோயாளிகளுக்கு இலவச அக்குபஞ்சர் மருத்துவம் செய்யப்பட்டது. சித்தா மருந்துகள் மற்றும் உணவு பொட்டலங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமுக்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் டாக்டர் சுப்பையா பாண்டியன் சிகிச்சை அளித்தார்.
ஏராளமான நோயாளிகள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திமுகவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் டாக்டர் சுப்பையா பாண்டியன் சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றி இலவச மருத்துவ முகாம்,நலத்திட்ட நிகழ்ச்சிகள் என திமுகவில் எந்த பெரிய பதவியிலும் இல்லாமல் கட்சியின் புகழை மேன்மேலும் வளர்க பாடுபட்டு வருகிறார்.