திருச்சி மன்னார்புரம் அருகே அல்மதினா உணவகத்தை அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் சாதிக்பாட்சா பாவா திறந்து வைத்தார்.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள (கலெக்டர் பங்களா செல்லும் வழி)
அல்மதினா உணவகத்தை அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் ஆன்மீக குரு சாதிக்பாட்சா பாவா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் காஜா மொய்தீன், மாநில பொதுச் செயலாளர் ஜாஹ் உசேன், செய்தி தொடர்பாளர் தீபக், திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ், செயலாளர் ஐவல்லா மருது, பொருளாளர் உசேன் ஹரி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
திறப்பு விழாவுக்கு வந்தவர்களை கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளரும், உணவகத்தின் உரிமையாளருமான முஹம்மது சபீக் வரவேற்று சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.