மார்ச் 8ஆம் உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஐடிஎஃப்சி பாரத் வங்கியின் சார்பில் மகளிர் தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில்
வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரவீன்விச்சா தலைமையில்
நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக மகளிர் தின உரையை வழங்கினார்.
மற்றும் ஐடிஎப்சி வங்கியின் முதன்மை செயல் அதிகாரி கணேசய்யர், கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கிறிஸ்டரி சுபத்ரா, பேச்சாளர் மது ஆகியோர் மகளிரை உற்சாகப்படுத்தும் விதமாக உரை நிகழ்த்தினர்.
விழாவில் ஐடிஎஃப்சி முதன்மை பொது மேலாளர்கள் அன்பரசி, சுப்பிரமணியன் மற்றும் 800க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் பேசுகையில்
சமுதாயத்தில் பெண்கள் நிலை என்பது ஆராய வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
கலாச்சார பின்னணி பார்க்கும்போது இலக்கியத்திலும் எழுத்திலும் ஒரு உயரிய இடத்தை கொடுத்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது.
இலக்கியத்தில் சொல்லப்பட்ட படி சமுதாயத்தில் போற்றக்கூடிய இடத்தில் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஏன் இடைவெளி இருக்கிறது என்பதை ஆராய வேண்டும் அது நமக்கு கடமையும் பொறுப்பும் கூட.
இங்கு வந்து இருக்கும் பெண்களும் ஆண்களும் கூட இணைந்து செயல்பட வேண்டும். பெண்களுக்கு நாம் எதிர்பார்க்கக் கூடிய வேலைவாய்ப்பில் அதிகாரப் பகிர்வில் முக்கிய ஒரு இடம் வரும் என்பதற்கு சந்தேகமில்லை. நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தில் பெண்கள் பங்களிப்பு என்பது ஆண்களை விட அவருடைய திறமை இன்னும் ஆண்களைவிட அதிகமாக இருக்கிறது என்று கூட கூறலாம். அதற்கு எது தடையாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அடைய வேண்டும் என்பது எனது எண்ணம். காவல்துறை என்பது பாதுகாப்பை விட பாதுகாப்பு உணர்வை உருவாக்குவது முக்கியமான நோக்கமாகும். காந்தியடிகள் சொன்னது போல பெண் எந்தவித பயமும் இல்லாமல் தனியாக போவது தான் உண்மையான சுதந்திரம் என காவல்துறையினர் இலக்காக எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகின்றோம். மத்திய மண்டலத்தை பொருத்தவரை பெண்களுக்கு குழந்தைக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த வருடம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒவ்வொரு வீடாகச் சென்று பெண்கள் எதிரான குற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 181 டோல் ஃப்ரீ நம்பர் குறித்ததான எண்ணை பிரபலப்படுத்துவதற்கு மொபைல் செயலியை அறிமுகப்படுத்து இக்கட்டான நேரங்களில் தொடர்பு கொள்ளும் படியான ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ரோட்டோரம் உள்ள பெண் குழந்தைகள், மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகள், மனநலம் பாதிக்கப் பட்டுள்ள பெண் குழந்தைகள் இதுபோன்று ஏழு பிரிவாக பிரித்து அவைகளை கண்டறிந்து மாவட்டம்தோறும் நடவடிக்கை எடுப்பது அவர் நேரில் சந்தித்து பாதுகாப்பு உணர்வையும் ஆலோசனை வழங்கி வருகிறோம். காவல் துறை சார்பாக என்னென்ன தேவையோ அதை செய்து வருகிறோம் என பேசினார்.
தொடர்ந்து
விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.