திருச்சி 48 வது வார்டுக்கு உட்பட்ட இரஞ்சிதபுரம் பகுதியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.எம். தர்மராஜ்,வட்ட செயலாளர் டோல்கேட் சுப்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட மகளிர்கள் அனைவருக்கும் மாமன்ற உறுப்பினர் இ.எம். தர்மராஜ் நினைவு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் முத்தமிழ் செல்வி, சுகந்தி, ஜெகதம்பாள், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மகளிர் அணியைச் சேர்ந்த பத்மா, மாலா, அங்காளபரமேஸ்வரி, ஹெலன் மேரி, வசந்தி,ராணி, ஹெலன்,சகாயமேரி, வசந்தி,பவானி,
சித்ரா,ஷோபனா,ஷெர்லின், வாசுகி,ஜென்மராக்கீனி மற்றும் 48வது வார்டு பொறுப்பாளர்கள் ஜமால் முகமது, சேகர்,கோவிந்தராஜ் ,கணேசன், தியாகு,அடைக்கலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.