Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆண்டவனுக்கே அல்வா கொடுக்கும் இந்து சமய அறநிலைத்துறை. வழக்கறிஞர் மஹேஸ்வரி வையாபுரி அறிக்கை.

0

 

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆண்டவனுக்கே அல்வா?

“வெளிச்சம் “”கொடுத்த வெளிகண்ட நாதர் சுவாமிக்கு “அல்வா” கொடுக்கும் இந்து சமய அறநிலைத்துறை.

சிவன் சொத்துக்கு அல்வா கொடுத்த இந்து சமய அறநிலைத்துறை அலுவலர் குறித்து முழு ஆதாரத்துடன் “அல்வா ” செய்தி விரைவில்…

குறிப்பு: கடந்த
25.01.2022 ,ஆம் தேதி எங்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி பாலக்கரை பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில், வெளிகண்ட நாதர் திருக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்த இத்திருக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறை தனியார் வசம் ஒப்படைத்தது குறித்து முழுமையான தகவல் கொண்டு தகவல் கொடுத்து இருந்தோம்.

மேலும் கடந்த 01.09. 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட திருக்கோயில் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி எங்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி மண்டலம், இணை ஆணையர் அலுவலகத்தில், இயங்கி வரும் உதவி ஆணையர் அலுவலக பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமை எழுத்தர் தகவல் கேட்டு விண்ணப்பித்து இருந்தோம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமை எழுத்தர், எங்கள் மனுவின் மீது இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்று வருகிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

ஆண்டவருக்கே அல்வா கொடுக்கும் துறை தான் இந்து சமய அறநிலைத்துறை. இத்துறை அலுவலர்களுக்கு விரைவில் எதிர்பாருங்கள்…

என ஆலய சொத்தை மீட்டெடுக்கும் போராளி,நிறுவனர்
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க போராளி வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.