Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் 1500 நெருங்கியது கொரோனா பாதிப்பு. 3 வது அலை ஏற்படுமா?

0

'- Advertisement -

Ad banner

தமிழகத்தில் கடந்த மே மாதம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதம் படிப்படியாக குறைய தொடங்கியது.

அந்தவகையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. தொடர்ந்து வேகமாக குறைந்த தொற்று கடந்த நவம்பர் மாதம் முதல் ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தாக்கம் இருந்து வந்த நிலையில் தற்போது, மீண்டும் கொரோனா ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

புத்தாண்டு தொடங்கிய நிலையில் கொரோனா பாதிப்பு உயர தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே 3-வது அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மேலும் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,49,534 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு 2,920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மேலும், 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,784- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை
8,340- பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 611 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 04 ஆயிரத்து 410 பேர் மொத்தம் குணம் அடைந்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.