Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி சார்பில் சைக்கிள்,ஓட்டம், மற்றும் நடை போட்டி .மாநகராட்சி ஆணையர் தகவல்.

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை அமுதம் பெருவிழாவாக கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதையும், மிதிவண்டி ஓட்டுவதையும், ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதையும் ஊக்குவைக்கும் விதமாக Freedom 2 Walk and Freedom 2 Cycle போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் பின்வரும் கணினி வலைத் தளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்த பின்னர் செயலி (App) ஒன்று பதிவிறக்கம் ஆகும்.

Suresh

இந்த செயலியில் On பட்டனை அழுத்திய பின்னர் தினசரி நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் போது, தினசரி பயிற்சி மேற்கொள்ளப்பட்ட விபரங்கள் இந்த செயலியில் சேமிக்கப்படும்,

இதன் மூலம் நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது ஊக்குவிக்கப்படும். இப்போட்டி இந்தியளவில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தங்களது பங்களிப்பினை அளிப்பதன் மூலம், இப்போட்டியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியினை முன்னிலைக்கு கொண்டு செல்ல ஒத்துழைக்குமாறு ஆணையாளர் கேட்டுக் கொள்கிறார்கள்.

நடை பயிற்சி/Freedom 2 Walk –
https://www.allforsport.in/challenges/challenge/1a5a1a0c-5f36-11ecaa51-97951431f31a
மிதிவண்டி ஓட்டுதல்/Freedom 2 Cycle –
https://www.allforsport.in/challenges/challenge/8d6ad9fe-5f3c-11ec-94a2-a7bdf42e8eb6

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.