Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

22, 23 தேதிகளில் அதிமுக உட்கட்சித் தேர்தல்.திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.

0

முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி.ந. நடராஜன்
அறிக்கை:

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர்களின் ஆணைக்கிணங்க

திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் வழிகாட்டுதளின்படி

22.12.2021 மற்றும் 23.12.2021 ஆகிய தேதிகளில் காலை 09.01 மணி முதல் 05.00 மணி வரை கீழ்கண்ட இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்கள் கரூர் சின்னசாமி, கழக அமைப்புச் செயலாளர், பி.சி. இராமசாமி ஈரோடு மாநகர் மாவட்டக் அவைத் தலைவர், முன்னாள் அமைச்சர், கே.வி. இராமலிங்கம், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், ஆகியோர்களின் தலைமையில் ஆணையாளர்கள் வருகை புரிந்து தேர்தல் நடத்த உள்ளனர்.

அதுசமயம் மாநகராட்சி, வட்ட, அதிமுக செயலாளர்கள், நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தகுதியுடைய நபர்கள் தேர்தலில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகர் மாவட்டம்..

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி

மலைக்கோட்டை, காந்தி மார்க்கெட் பகுதிகளுக்கு நாயுடு மகாஜன சங்கம் திருமண மண்டபம்,
கீழ்புலிவார்டு ரோடு, திருச்சி.

பாலக்கரை பகுதி ,
SJ திருமணமண்டபம், சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு.

ஏர்போர்ட் பகுதி ,விஜய் மினி ஹால் ரோடு ஏர்போர்ட்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி:

கருமண்டபம் பகுதி மற்றும் ஜங்ஷன் பகுதிகளுக்கு

ஸ்ரீனிவாசா கல்யாண மண்டபம், பெமினா ஹோட்டல் எதிரில், மத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சி.

தில்லைநகர் பகுதி மற்றும் உறையூர் பகுதிகளுக்கு

சண்முகா திருமண மண்டபம், புத்தூர்,

திருச்சி மாநகராட்சி வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் தங்களுக்குரிய இடங்களில் வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டு மனுதாக்கல் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

என திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

(அனைவரும் முக சுவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும்) தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.