Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அறிவிப்பு.

0

'- Advertisement -

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

Ad banner

இதில் 4 முறை சாம்பியனான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

கேப்டனாக டெல்லியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் யாஷ் துல்லும், துணை கேப்டனாக ஆந்திராவின் எஸ்.கே.ரஷீத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

17 பேர் கொண்ட இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த மனவ் பராக்கும் அங்கம் வகிக்கிறார்.

சென்னையில் பிறந்தவரான 18 வயதான மனவ் பராக் சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் ஆவார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.