Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வங்காளதேசத்திற்க்கு எதிராக 2 டெஸ்ட். பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்று தொடரை வென்றது.

0

'- Advertisement -

பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் , டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ad banner

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக முதல் மூன்று நாட்களில் பல மணி நேரம் போட்டி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 4வது நாளில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள் எடுத்திருந்த போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆட தொடங்கிய வங்காளதேச அணியின் வீரர்கள் பாகிஸ்தானின் சுழல்ப்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து இருந்தது.

TVK ad

இந்த நிலையில் இன்று காலை 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மேலும் 11 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் வங்காளதேசம் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியின் ஆப் பிரக்பந்துவீச்சாளர் சஜித் கான் 8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி வங்காளதேச அணியை பாலோவ் ஆன் செய்ய அழைத்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் வங்காளதேச அணி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2 இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட்கள் வீழ்த்திய சஜித் கான் ஆட்டநாயகனாகவும் ஆபித் அலி தொடர் நாயகனாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.