இந்து திருக்கோயில் மீட்டு இயக்க தலைவர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி அலுவலகம் அருகே சீர்கேடு.
பெண்கள் முகம் சுளிக்கும் அவலம்.
திருக்கோவில் அருகே சிறுநீர் கழிப்பிடம்.
மாநகராட்சி அதிகாரிகள் தினமும் செல்லும் பாதையில் தான் இந்த அவல நிலை.
கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்.
தூங்கி வழியும் மாநகராட்சி நிர்வாகம்.
இனியாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா?
திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், 23வது வார்டு, ஹீபர் ரோடு, பாலக்கரை பகுதியில் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் அருகில் பல ஆண்டுகளாக குப்பைகளாக காட்சியளிக்கிறது.
அந்த குப்பை மேடு பகுதி தற்போது சிறுநீர் கழிப்பிடமாக மாறி உள்ளது.
தற்போது செல்வவிநாயகர் திருக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் அந்த இடம் காட்சியளிப்பது மட்டுமில்லாமல்
துர்நாற்றம் அதிகம் வீசுவதால் நோய்தொற்று பரவக்கூடிய நிலை உள்ளது.
மேலும் திருக்கோயிலுக்குஅதஅதிக அளவில் பெண் பக்தர்கள் வரக்கூடிய பகுதியில் ஆண்கள் சிறுநீர் கழிப்பதால் பெண் பக்தர்கள் மட்டுமல்லாது அந்த பகுதியில் உள்ள பெண்களும் முகம் சுளித்துக் கொண்டு நடக்கக் கூடிய நிலை தற்போது வரை உள்ளது.
படத்தில் குறிப்பிட்டுள்ள பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள், ஆனால் நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் இந்த அவலம் நடப்பதை கண்டு இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்க செயலாகும்.
இனியாவது சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சிறுநீர் கழிப்பிடமாக இருக்கக்கூடிய இடத்தை சுத்தம் செய்து
இதுபோன்ற அசுத்தம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தால், அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் நிம்மதியாக நடந்து செல்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும், மேலும் திருக்கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள், மற்றும் அனைத்து பக்தர்களும் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன். உடனடியாக நடிவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன் என
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க தலைவர், வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.