இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்க, ரெயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால், மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க, ரெயில் நிலையத்திற்குள் பயணிகளை வழியனுப்பி வைக்கவும், வரவேற்கவும் அதிகமான நபர்கள் வருவதை தடுக்க ரெயில் பிராட்பாரம் டிக்கெட்டின் விலையை 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது, கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் ரெயில்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை தற்போது மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.