Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்.ஐ.டி.பாரம்பரிய மையத்தை நிர்வாக குழுத் தலைவர் பாஸ்கர் பட் திறந்து வைத்தார்.

0

என்.ஐ.டி திருச்சி பாரம்பரிய மையம் திறந்துவைக்கப்பட்டது.

தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்.ஐ.டி
திருச்சி) பாரம்பரிய மையம் , நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட்
அவர்களால், இயக்குநர் மற்றும் முன்னாள் மாணவர்கள் முன்னிலையில்
திறந்துவைக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்கள் மற்றும் கழகத்தின் கூட்டுமுயற்சியான இம்மையம்,

என்.ஐ.டி திருச்சியின் 56 ஆண்டுக்காலத்தைப் பறைசாற்றுகிறது.
நினைவுகளின் மதிப்பைக் குறித்துப் பேசுகையில் பாஸ்கர் பட் அவர்கள்,
கடந்த காலத்தைப் பத்திரப்படுத்தி, தற்காலத்திற்கு வரலாறு மற்றும் சார்பு
குறித்த அறுபடாத உணர்ச்சியைத் தரும் அருங்காட்சியகங்கள் மற்றும்
ஆவணக்காப்பகங்கள் குறித்த தமது அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.

என்.ஐ.டி திருச்சி முன்னாள் மாணவர் சங்கம் (ஆர்.இ.சி.ஏ.எல்) தலைவர்
மகாலிங்கம், இம்மையம் அமைக்கப்படுவதற்காக நிதியைத் திரட்டிய முன்னாள்
மாணவர்களுக்கு நன்றி கூறினார்.

இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் தற்போது தேசிய
முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகத் திகழும் இக்கழகத்தின் வளர்ச்சியைப்
பறைசாற்றும் ஒலி-ஒளி சான்றாக அமைந்திருப்பதாக, இப்பாரம்பரிய மையத்திற்கான
தேவையை வலியுறுத்தினார்.

இப்பாரம்பரிய மையத்தின் கட்டட வடிவமைப்பாளர் ஜோசப் ஆஸ்டின், கழக
வளாகத்தின் கல்விசார் மற்றும் கலாச்சார வாழ்வு பல்வகையில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் குறித்து விளக்கவுரையாற்றினார்.

நிகழ்வின் நிறைவாக ,கழகம் ‘தி ரோட் அஹெட்’ (முன்னால் உள்ள பாதை ) என்ற
தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டது.

Leave A Reply

Your email address will not be published.