Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறினார் கே.எல்.ராகுல்.

0

'- Advertisement -

20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

Ad banner

இந்த நிலையில் 20 ஓவர் பேட்டிங் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தரவரிசையில் 4 இடங்கள் சரிந்து 8 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய அணி இந்த உலக கோப்பையில் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் கே.எல் .ராகுல் அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் 839 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். 800 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

இதை தவிர தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதால் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 4வது இடத்தில் உள்ளார். மற்றொரு பாகிஸ்தான் தொடக்க வீரரான ரிஸ்வான் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.9 வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் மற்றும் 10 வது இடத்தில் தென்னாபிரிக்கா வீரர் வான் டெர் டஸ்ஸன் உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.