Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 உலக கோப்பை. ரபாடா ஹாட்ரிக்.இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

டி20 உலக கோப்பை. ரபாடா ஹாட்ரிக்.இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

0

20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.

தென் ஆப்பிரிக்க அணி முதல் விக்கெட்டை 15 ரன்களில் பறிகொடுத்தாலும் அதன்பிறகு டி காக்குடன் ஜோடி சேர்ந்த வாண்டெர் டுசன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபுறம் டிகாக் ( 27 பந்துகளில் 34 ரன்கள்), ஆட்டமிழந்தாலும் வான்டர் டுசன் அதிரடி காட்டினார்.

அவருக்கு மார்கரம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கடைசி கட்ட ஓவர்களில் இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சை புரட்டியெடுத்தனர். இதனால், ஜெட் வேகத்தில் ரன்வேகம் உயர்ந்தது.

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 189- ரன்களை தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது.

5 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய வான்டர் டுசன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 94 ரன்களும் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் மார்கரம் 52 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் ஜோஸ் பட்லர் 26 (15) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 1(3) ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி அதிரடியாக ரன் சேர்த்த மொயின் அலி 37 (27) ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டோன், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சிக்சர்களாக விளாச அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அடுத்து டேவிட் மலான் 33 (26) ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் மோர்கன் அடுத்ததாக களமிறங்கினார்.

சீராக ரன் ரேட்டை உயர்த்திய இந்த ஜோடியில் லிவிங்ஸ்டோன் 28 (17) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கிரிஸ் வோக்ஸ் 7 (3) ரன்னிலும், மோர்கன் 17 (12) ரன்னிலும், கிரிஸ் ஜோர்டான் வந்த வேகத்தில் வெளியேற்றி, ரபாடா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இறுதியில் அடில் ரஷித் 2 (2) ரன்களும், வுட் 1 (1) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளும், ப்ரெட்ரோரியஸ் மற்றும் ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

ஹாட்ரிக் விக்கெட் விழ்த்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரபாடா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.