Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 உலகக் கோப்பை. ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற இந்திய ரசிகர்கள் வேண்டுதல்.

டி20 உலகக் கோப்பை. ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற இந்திய ரசிகர்கள் வேண்டுதல்.

0

'- Advertisement -

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் குரூப்-2-ல் இன்று மாலையில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

இந்த ஆட்டத்தை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் உற்று நோக்குகிறது. ஏனெனில் இந்த ஆட்டத்தின் முடிவு தான் இரண்டு (இந்தியா, நியூசிலாந்து) அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடியதாகும்.

3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

மாறாக நியூசிலாந்து அணி தோற்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு உருவாகும். அதாவது இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியாவை தோற்கடித்தால் அரைஇறுதிக்குள் நுழைந்து விடலாம்.

இதனால் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச வேண்டும் என்று கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் வேண்டுதலுடன் காத்து கிடக்கிறார்கள்.

நியூசிலாந்து அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் அச்சுறுத்தல் ஆயுதம் சுழற்பந்து வீச்சு தான். சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது அந்த அணிக்கு பின்னடைவாகும். ரஷித் தான் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி பேட்ஸ்மேன்களும் மிரட்டினால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் நியூசிலாந்துக்கு சவால் அளிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.