அன்பாலயம் முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினம் கொண்டாட்டத்தில் நரை ஓவியம் வளையொளி வெளியீட்டு விழா.
அன்பாலயம் முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினம் கொண்டாட்டத்தில் நரை ஓவியம் வளையொளி வெளியீட்டு விழா.
திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியில் இயங்கி வரும் அன்பாலயம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் தினம் கொண்டாட்டம் மற்றும் அன்பாலயம் செந்தில்குமார் அவர்களின் உருவாக்கத்தில் நரை ஒவியம் வலையொளி (youtube) தளம் வெளியிட்டு விழா நிகழ்வு திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள திலகவதி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மைனா,கும்கி திரைப்படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நரைஒவியம் (வலையொளி Youtube) தளத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்மலை சரக காவல்துறை உதவி ஆணையர் அப்துல் கபூர் ஹிந்து மிஷன் மருத்துவமனையின் செயலாளர் வி. வி.சுப்பிரமணியன், பேராசிரியர் ரவீந்திரன், மரு.திலகேந்திரன், மரு.வக்கீஷ்வரி ,

தடகள விளையாட்டு வீராங்கனை தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பங்கேற்க்க வந்தவர்களை அன்பாலயம் செந்தில்குமார் வரவேற்றார்.
இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் , ரத்தினம், பிரபு, சரவணன்,மைக்கேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை புரிந்திருந்த முதியவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் கதர் துண்டுகளை அணிவித்து மரியாதை செய்தனர்.