திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அரசு உழியர்கள மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அலுவரிடம் மணப்பாறை 10வது வார்டு அதிமுக வேட்ப்பாளர் சார்பில் புகார்.
திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அரசு உழியர்கள மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அலுவரிடம் மணப்பாறை 10வது வார்டு அதிமுக வேட்ப்பாளர் சார்பில் புகார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வார்டு எண்.10க்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில்..
திமுகவிற்கு ஆதரவாக வளநாடு ஊராட்சி அலுவலக கிளார்க் M.B.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதே போல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் T.இந்திரா என்கிற செவிலியரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வரும் நபர்களிடம் வாக்கு சேகரித்தார்,
மேலும் வளநாடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பணியாற்றும் T.M.P.சேட்டு முகமது என்பவரும் மாணவ மாணவியரின் பெற்றோர்களிடம் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உதவியாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர் அவர்களிடம் வேட்பாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.