திங்கட்கிழமை அனைத்து இல்லங்களில் முன் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.கூட்டணி கட்சியினருடன் அமைச்சர் மகேஷ் ஆலோசனை.
வருகின்ற 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று
மத்திய அரசை கண்டித்து ஆங்காங்கே இல்லங்களின் முன் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஆதரவு கோரி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பெட்ரோல் விலை உயர்வு,எரிவாயு விலை உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத மத்திய அரசினைக் கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அறிவித்து நடைபெறவிருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் தங்களின் இல்லங்களில் ஆங்காங்கே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும்.
மக்களிடையே இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்து தமிழக முதல்வரின்
கட்டளையை தன் கடமையாக ஏற்று, கூட்டனி கட்சி நிர்வாகிகள் சிறப்பாக நடத்திட வேண்டுமென கலந்துரையாடினார்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இக்கலந்துரையாடலில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சமது, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கோவிந்தராஜ், ஜவகர்,
கம்யூனிஸ்ட் சிபிஎம் ஜெயசீலன், ராஜா, கம்யூனிஸ்ட் சிபிஐ இந்திரஜித், திராவிடமணி, மதிமுக வெல்லமண்டி சோமு, தமிழ்மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் அருள், முத்தழகன், கொங்குநாடு மக்கள் கட்சி சேகர், தமிழக வாழ்வுரிமை இயக்கத்தைச் சார்ந்த ராயல்ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபிபுல்ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி பயாஸ், திராவிடர் கழகம் ஆரோக்கியராஜ், ஆகியோர் பங்கு பெற்றனர்.