இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலை அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நன்றி .
அயோத்திதாசப் பண்டிதாருக்கு மணி மண்டபம், இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சிலை அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவிமினி ஹாலில் தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்புக் குழு
கூட்டம்
ஒருங்கிணைப்பாளர் மனோஜ் தலைமையில் நடைபெற்றது…

இதில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளையொட்டி அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் .
அதனை தொடர்ந்து சட்ட சபையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணி மண்டபம் அமைத்தல், இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு திண்டிவனத்தில் திரு உருவ சிலை அமைத்தல் மற்றும் நீட் தேர்வு காரணமாக உயிர்நீத்த அனிதாவின் பெயரில் அரியலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ரமேஷ்,சுகுமார்,
சண்முகம், திண்டுக்கல் சேகர், இன்ஜினியர் ரமேஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.