Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு சம்பவங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் காதல் மனைவி மாயம்.

0

திருச்சியில் பல்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் மூன்று பெண்கள் மாயம்.

1.
காதல் திருமணம் செய்த பெண் மாயம்.

திருச்சி பட்டவொரர்த் ரோடு ஆர்.சி. நடுநிலைப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னார். இவரது மனைவி கலா. இவர்கள் 11 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். 2 மகன்கள் உள்ளனர். கணவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கலா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 .
கல்லூரி
மாணவி மாயம்.

திருச்சி ஏர்போர்ட் உடையான்பட்டி சாமி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் சிந்தியா (வயது 20). இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் டி.சி.இ படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தாய் காஞ்சனா கொடுத்த புகாரின் பெயரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.பள்ளி மாணவி மாயம்.

திருச்சி செந்தண்ணீர்புரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காதர் ஷரிப். இவரது மகள் யாஸ்மின் சுமானா பாத்திமா (வயது 17).இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டைவிட்டு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை காதர் ஷரிப் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.