திருச்சி அண்ணா சிலை அருகே விபத்து.
லாரி மோதி செவிலியர் பலி.
கணவர், 5 வயது குழந்தை படுகாயம்.
திருச்சி மாவட்டம் லால்குடி சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மகன் முருகேசன் (வயது 30).இவரது மனைவி ஆரோக்கிய டயானா (வயது 28 ).இவர் லால்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு சாய்ஸ் பரவன் என்கிற 5 வயது குழந்தை உள்ளது.
இவர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சியில் ஒரு மருத்துவமனைக்கு வந்தனர்.
பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.
கணவர் முருகேசன் வண்டியை ஓட்டினார்.
இருச்சக்கர வாகனம் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே காவிரி பாலம் சாலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் மூவரும் கீழே விழுந்தனர்.
இதில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த ஆரோக்கிய டயனா பரிதாபமாக இறந்தார். கணவர் முருகேசன் குழந்தை சாய்ஸ் பரவன் ஆகிய இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.