Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் செயற்குழுக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

0

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முனைவர் பேட்டரி ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார். முன்னதாக துணை பொதுச் செயலாளர் ஜான் கென்னடி வரவேற்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து இந்த மாநில செயற்குழு கூட்டத்தின் தீர்மானமாக : கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆசிரியர்கள் பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு இந்த மாநில செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது,

மேலும் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த காலம் ஊதியமில்லா விடுப்பு காலமாக கருதப்பட்டுள்ளது இது போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு தொடர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது எனவே தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறை படுத்தியது போல் வேலை நிறுத்த காலத்தையும் பணிக்காலமாக முறைப்படுத்தி கேட்டுக்கொள்கிறோம்,

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தின்போது மாநிலம் முழுவதும் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் பணியாற்றிய இடத்திலிருந்து தொலைதூர பகுதிகளுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணி இடமாறுதல் செய்யப்பட்டனர்

இந்த நடவடிக்கையால் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட தங்கள் வசிப்பிடத்தில் இருந்து 100 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மலைப்பகுதிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்,

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு Tamilnadu government servant (condition and service) Act 2016 section 41 ன்படி கூடுதல் ஊதிய விகிதத்தில் இருப்பவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இனிவரும் காலங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநில செயற்குழு கூட்டத்தின் நிறைவாக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் நன்றி உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.