திருச்சி மார்க்கெட் பகுதி தாராநல்லூர் கீரைக்கொல்லையில் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் அவதூறாக பேசிய பாதிரியாரை குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும்,நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டம்
மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பார்வையாளர் சேது அரவிந்த், பொதுச் செயலாளர் பெருமாள் சங்கர், பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், துணைத் தலைவர் பாலமுருகன், மார்க்கெட் மண்டல் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.
இதில் வர்த்தக பிரிவு மாநில செயலாளர் முரளிதரன், பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன், இளைஞரணி சுதாகர், மகளிரணி புவனேஸ்வரி, மாவட்ட துணைத்தலைவர்கள் அழகேசன், இந்திரன், பி ஆர் ராஜா,
வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், சுவேந்திரன், கணேசன், செந்தில்குமார், எஸ்.டி. அசோக்குமார், வக்கீல் கார்த்திகேயன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.