பால வேலை முடிந்தும்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராததால்
இரவும் பகலும் அல்லல்படும் பொதுமக்கள்.
திருச்சி தஞ்சை மெயின் ரோடு செடல் மாரியம்மன் கோவில் அருகில் பால வேலை ஆரம்பித்து 40 நாட்களில் 99%
வேலை முடிக்கப்பட்டு விட்டது.
மணல் நிரப்பி சரி செய்யப்பட்டால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்நிலையில் தற்போது உள்ளது.
ஆனால்
பால வேலை முடிந்து 20 நாட்கள் ஆகியும் மாநில நெடுஞ்சாலை துறை அலட்சியப் போக்கால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த சாலை வழியாகத்தான் டவுன் பஸ்கள் சென்று வரும் ,
ஆனால் இந்த பணியால் டவுன் பஸ் செல்வதில்லை, இருசக்கர வாகன ஓட்டிகள் சுற்றி செல்ல வழி தெரியாமல் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.