திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் :
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 5000 பேர்
ஆயுஷ் சிகிச்சைகளால் குணமடைந்துள்ளனர்.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தகவல்.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 4 மாவடங்களிலும் கரோனா தொற்றுக்கு உள்ளான சுமார் 5000 பேர் ஆயுஷ் சிகிச்சைகள் மூலம் குணமடைந்துள்ளனர் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது :
ஒருங்கிணைந்த திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 129 ஆயுஷ் மருத்துவப்பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 52 , கரூர் மாவட்டத்தில் 31, அரியலூர் மாவட்டத்தில் 22 , பெரம்பலூர் மாவட்டத்தில் 18 மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பேரிடர் பெருந்தொற்று காலங்களில் மாநகரம் நகரம் கிராமம், குக்கிராமங்கள் என அனைத்து பகுதி மக்களுக்கும் ரூ. 1 கோடி மதிப்புள்ள கபசுர குடிநீர் சூரணம், நிலவேம்பு குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைபோலவே சித்த மருந்துகளும் ரூ. 1 கோடிக்கும் மேலாக வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மருந்துகளை 50 சதவீதம் மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக கொரோனா பெருந்தொற்றை கட்டுபடுத்தியதில் சித்த மருத்துவம் பெரும்பங்கு ஆற்றி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கொரோனா தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களிலும் கோரோனா தடுப்பு சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் 5000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் மேற்கண்ட மாவட்.டங்களிலுள்ள கொரோனா தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் இதுவரை ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பது சிறப்பு.
மேற்கண்ட மாவட்டங்களிலுள்ள அரசு சித்த மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழக்கம்போலவே வேலை நேரங்களில் அனைத்து நோய்களுக்கும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி,இயற்கை மற்றும் யோகா உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும்,அரசு தாலுக்கா மருத்துமனைகளில் மேற்கண்ட நேரங்களிலும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் ஆயுஷ் மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அரசினர் ஊரக சித்த மருந்தகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் செயல்படுகிறது. பொதுமக்கள் தங்களுடைய உடல் நோய்களுக்கு மாறுபட்ட குறிகுணங்கள் எது தெரிந்தாலும் உடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள். சித்த மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவத்தையும் மருத்துவர்கள் ஆலோசனையோடு சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பயப்படத்தேவையில்லை.
எந்தவித பக்கவிளைவையும் உண்டாக்காது. இரண்டு மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்வதால் உடல் நோய்கள் கட்டுப்பட்டு பூரண குணம் அடையுமே தவிர எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மருத்துவர் ஆலோசனையோடு தான் எந்த மருந்தையும் உட்கொள்ளவேண்டும். சுய மருத்துவம் மருந்துகடைகளில் கேட்டு வாங்கி சாப்பிடுவது காலதாமதாக மருத்துவரை பார்த்து மருத்துவமனைக்கு செல்வதுதான் நோயின் தீவிரத்தை அதிகபடுத்தும். போலியான மருத்துவரிடம் சென்று போலியான மருந்துகளை வாங்கி பயன்படுத்தினால் உடல்
பாதிப்பை ஏற்படுத்தும் . போலி விளம்பரங்களை பார்த்து போலி மருத்துவரிடம் சென்று ஏமாற வேண்டாம்.
போலி மருத்துவர் பற்றியோ, போலி மருந்துகள் பற்றியோ யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாவட்ட
சித்த மருத்துவ அலுவலர், திருச்சி என்ற முகவரிக்கு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் போலியான உரிமம் பெறாத லேபில்கள் இல்லாமல் எந்த மருந்து விற்பமனை செய்வது தெரியவந்தாலும் மேற்கண்ட முகவரிக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
எதிர்வரும் 3ம் அலை மழைக்கால நோய் தடுப்பு மருந்துகள் அனைத்து ஆயுஷ் மருத்துவ பிரிவுகளில் இருப்பில் உள்ளன. அவை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி அரசு வழிகாட்டுதல்களான முகக்கவசம், சமூக இடைவெளி, தன்சுத்தம் மற்றும் சத்தான உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்வது உடல் உழைப்பு, உடற்பயிற்சியை உள்ளிட்டவைகளை கடைபிடிப்பது, மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் எந்த தொற்று வந்தாலும் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.