திருச்சி கல்வி மாவட்டத்தில் இன்று எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டிற்களா என்று கேட்டு வினவினார் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.
மாணவிகள் அமைச்சரிடம் தங்கள் கற்ற பல்வேறு படங்களை மனப்பாடமாக ஒப்பித்து காண்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்கினார் .
மாணவர்கள், மாணவிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளை ஆய்வு செய்தார். அந்தப் பள்ளியில் நூறாவது சேர்க்கையை தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்
தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தயங்காமல் முன் வந்து புகார் அளிக்க வேண்டும் என பள்ளி கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பிறகு முடிவு செய்யப்படும். இடைக்கால ஏற்பாடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு,
ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பிறகே முடிவு என்றார்.அன்பில்
மகேஷ்