Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

4 மாவட்டங்களில் கோயில்கள் 63 நாட்களுக்குப்பின் கோயில்கள் திறக்கப்பட்டது

0

நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது. 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் இன்று காலை 6 மணியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா தொற்றின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரித்து வெவ்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்துகிறது.

அந்த வகையில், 3-ம் வகை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளைச் செய்யும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுள்ளது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி. ஜவுளி, நகை கடைகளுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி சென்னையில் உள்ள பிரசித்தி வழிபாட்டு தலங்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அவர்களது உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை. தரிசனம் முடித்ததும் பக்தர்கள் வெளியேறும் வகையில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. விபூதி, குங்குமத்தை பொட்டலங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

63 நாட்களுக்கு பின் சென்னையில் உள்ள மசூதிகளில் தொழுகை நடந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் உள்ளிட்ட தேவாலயங்களில் திறக்கப்பட்டு கிறிஸ்துவ பெருமக்கள் வழிபாடு நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.