Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 26.06.2021

0

'- Advertisement -

இன்றைய ராசிப்பலன் – 26.06.2021

Ad banner

மேஷம்

உங்களின் ராசிக்கு கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும்.

குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு காலை 09.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு காலை 09.55 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களோடு சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.