Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுகவுடன் அதிமுக நிச்சயம் துணை நிற்கும், சட்டசபையில் ஸ்டாலினிடம் எடப்பாடி உறுதி

0

'- Advertisement -

Ad banner

சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு நடைபெறுமா, இல்லையா என தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் என்றும் கூறினார்.

தற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது நீட் தேர்வு வேண்டாம் என 4,5 முறை வலியுறுத்தினேன்.

2010-ல் விரும்புகின்ற மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற நிலைமை இருந்தது. தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் நீட் கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடுவோம்; வெற்றி பெறுவோம்.

அதிமுகவும் துணை நிற்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்’ என்றார்.

இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நிச்சயம் துணைநிற்கும் என்று உறுதி அளித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.