அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவூண்டானா அருகில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை நடைபெற்றது.
இதில் தமிழ் மாநில பொது செயலாளர் ஜாவித் உசேன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொன்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அமைதி பூங்காவாக இருக்கும் லட்சத்தீவில் கொரொனா நோய்தொற்றின் பிடியில் சிக்க வைத்தது மட்டுமின்றி அமைதியான வாழ்க்கைவாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதாரத்தை

சீர்குழைக்கும் விதமாக யூனியின் பிரதேசங்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட PROFUL KHODA PATEL இன் பதவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்,
ஏழை எளிய மக்கள் மீதுதொடர்ந்து சுமத்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை தடுத்து மத்திய அரசு வழி செய்ய வேண்டும்,
அகில இந்திய முஸ்லிம் லீக்கட்சியின் தேசிய தலைவர் சாதிக் பாட்சா பாவா தமிழக முதல்வரிடம் கேட்டு கொண்டது போல் இனி வரும் காலங்களில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளிலே ஜாதி, மத பேதமின்றி அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி.கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மகுது, அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் காஜாமுஹையத்தீன், தேசிய பொது செயலாளர் முகமது மீரான், தமிழ் மாநில செய்தி தொடர்பாளர் தீபக், திருச்சி மாவட்ட பொருளாளர் உசேன் ஷரீப், திருச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது யூசுப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.