காந்தி மார்க்கெட் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில்
திறக்கக்கோரி வியாபாரிகள் வலியுறுத்தல்.
ஆனால் அலுவலர்கள் மறுப்பு.
விரைவில் காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் தரப்பிலான ஆலோசக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பிறப்பித்துள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்க உத்தரவில் திங்கள்கிழமையிலிருந்து சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் அலுவலர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காந்தி மார்க்கெட்டில் உள்ள 27 வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வியாபாரிகள் 7 ஆம்தேதி முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பதால் திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் குறையாத நிலையில் காந்தி மார்க்கெட்டை திறந்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
எனவே காந்திமார்க்கெட்டுக்குப் பதிலாக இன்னும் ஒரு வார காலத்திற்கு மொத்த வியாபாரம் எங்கு நடைபெறுகிறதோ அங்கேயே நடைபெற வேண்டும்
.அதேபோல் சில்லறை வியாபாரத்தையும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நடத்த வேண்டும் எனக் கூறினர்.
இதனைத்தொடர்ந்து, டைமண்ட் ஜூப்ளிகுதியில் சில்லறை வியாபாரிகள் காலை 6 மணிக்கு மேல் தங்களது காய்கறி மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொள்ளவாவது அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற அதிகாரிகள்அதற்கு அனுமதி அளித்தனர்.
ஆனால்
காந்தி மார்க்கெட் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.