மத்திய பிரதேசத்தில் இருந்து.
திருச்சிக்கு 88 டன் ஆக்சிசன் இன்று வந்தது.
பல மாவட்டங்களுக்கு அனுப்பி .வைப்பு.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின்ன் தாக்கத்தால் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகினர். இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல நோயாளிகள் இறந்தனர் எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நாடு முழுவதும் 20 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்திட மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது.
இதுவரை 1200 டன் திரவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 80 டன் ஆக்சிசன் திருச்சிக்கு வந்தது.
பின்னர் அவை டேங்கர் லாரிகள் மூலம் பதிமூன்று மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
அதேபோல் மத்திய பிரதேச மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து இன்று அதிகாலை ரெயில் மூலம் 88 டன் ஆக்சிசன் திருச்சி வந்தது .அதை திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
தொடர்ந்து ஆக்சிஜன் வர உள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.