Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவசமாக தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

0

அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக ஜூன் 21 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.
கொரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.
கொரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.

கொரோனா தொற்றால் மருத்துவ துறையில் அடிப்படைவசதிகளை நாம் மேம்படுத்தியுள்ளோம்.
மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு உயர்த்தியிருக்கிறோம்.
அனைத்து கட்டமைபைப்புகளையும்பயன்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மக்களை காப்பாற்றுவதற்காக முப்படைகளையும் பயன்படுத்தினோம்.
தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம்.

தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.
முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது.
அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும்.

மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்யத்தேவையில்லை.
இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகித்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம்.
இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.
தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.
நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
ரேஷனில் உணவு தானியங்கள் வழங்குவதால் 80 கோடி பேர் பயனைடவர்.

Leave A Reply

Your email address will not be published.