திருச்சி அரியமங்கலத்தில்
பாஜக நிர்வாகி சரமாரி அரிவாள் வெட்டு.
ராணுவ வீரர் கைது.
திருச்சி அரியமங்கலத்தில் பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் நடந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி அரியமங்கலம் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி இவர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான பாலமுருகன் என்பவர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் தண்டபாணி அரிவாளால் வெட்டினார்.
இதில் காயமடைந்த தண்டபாணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து ராணுவவீரர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் இன்று காலையில் பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.