கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் மதிய உணவு வழங்கினார்
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதி சார்பாக
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு
R.G.சத்தியமூர்த்தி நினைவு தையல்காரர் தெரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
நிகழ்வில் கலந்துகொண்ட திருச்சி தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திமுக கொடியினை ஏற்றி கலைஞர் அவர்களின் படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்
பின்னர் எழை, எளிய பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் மண்டி. சேகர், மதிவாணன், வட்டச் கழக செயலாளர் வேலுமணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.