திருச்சி தேசியக் கல்லூரி சார்பாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
திருச்சி, பாரதிதரசன் பல்கலைக்கழகம் சமூக சேவையாக தன்
கட்டுப்பாட்டிற்குள் வரும் கல்லூரிகளில் உள்ள செஞ்சிலுவை சங்கம் சார்பாக
அறுவை சிகிச்சை முகக்கவசத்தை சேகரித்து, திருச்சி, மாவட்ட ஆட்சியாளரிடம்
கொடுக்க முடிவெடுத்தது.
இந்த சமூக சேவையில் திருச்சி, தேசியக் கல்லூரியின்
இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் இணைய முடிவு எடுத்து, கல்லூரியின் சார்பாக
2000 அறுவை சிகிச்சை முகக்கவசங்களை இன்று
பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜி. கோபிநாத்திடம் கல்லூரி முதல்வர்
முனைவர் ஆர். சுந்தரராமன் வழங்கினார்.
உடன் பல்கலைக்கழக இளைஞர்
செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. வெற்றிவேல்
மற்றும் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் பொறுப்பாளர்
முனைவர் ஏ. விஜயசங்கர் இருந்தனர்.
கல்லூரியின் செயலாளர் கே. ரகுநாதன்
முனைவர் ஏ. விஜயசங்கரைப் பாராட்டினார்.